முத்தலாக் பழக்கத்தை ஒழிப்போம்! அமித்ஷா உறுதி!!

டெல்லி: பக்கோடா விற்பது கேவலமல்ல. பக்கோடா விற்றால் தொழிலதிபராக முடியும் என்றார் பாஜக தலைவர் அமித்ஷா.மாநிலங்களவையில் அவர் பேசியதாவது: ‘‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு ஊழல் இல்லாமல் செயல்படும் அரசாக உள்ளது. அதனால் தான், 2014ம் ஆண்டு முதல் பெரும்பாலான தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.எதிர்கட்சியாக இருந்தபோது, நாங்கள் ஜிஎஸ்டி வரித்திட்டத்தை எதிர்க்கவில்லை.
நாட்டின் பல பகுதிகளில் முன்பு மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பாஜக அரசு இந்த நிலையை தற்போது மாற்றியுள்ளது.கவர்ச்சி திட்டங்கள் மூலம் மக்களை ஈர்க்கும் அரசாக செயல்பட நாங்கள் விரும்பவில்லை. இதுபோன்ற பல அரசுகளை பார்த்து விட்டோம். உண்மையிலேயே மக்களுக்கு சேவைபுரிய ரும்கிறோம்.

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்யமும் பழக்கம் அறவே இல்லாமல் செய்யப்படும்.வேலையின்றி இருப்பதை விட பக்கோடா விற்பது மேலானது, டீ விற்றவர் மகன் நாட்டின் பிரதமராக முடியும் என்றால் பக்கோடா விற்பவர் மிகப் பெரிய தொழிலதிபராக முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here