மதம் மாறி காதலித்த வாலிபர் படுகொலை!

டெல்லி: முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வாலிபர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.
டெல்லியை சேர்ந்த அங்கிட் சக்சேனா( 23), புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அங்கிட் இந்து என்பதால், நிஷாவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதையும்மீறி இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த நிஷாவின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் டெல்லியில் அங்கிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்த அங்கிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவத்தை பார்த்த அங்கிட்டின் தாய், கத்திக் கொண்டே ஓடிவந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து நிஷாவின் தாய், தந்தை, மாமா மற்றும் தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.இதற்கிடையே அங்கிட் சக்சேனாவின் மரணத்தில் அரசியல் புகுந்துள்ளது. டெல்லி அகாலிதள் எம்.எல்.ஏ. இக்கொலை சம்பவத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதை கண்டித்துள்ளார். உடனடியாக அங்கிட் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர்கள் அங்கிட் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர்.   முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here