மணமேடை ஏறவேண்டியவர் மனம் மாறி தற்கொலை!

நெல்லை:திருமணத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னர் தூக்குப்போட்டு மாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). அதே ஊரைச்சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்திருந்தார்.கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை காலை 9.30 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது.
மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வர தயாராகிவந்தனர்.                                    காலை 8.30 மணிக்கு மணமகன் வெங்கடேஷ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்டநேரமாகியும் அவர் வெளியில் வராததால் கதவை உடைத்து சென்று உறவினர்கள் பார்த்தனர்.
அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.                                                                   திருமண மண்டபத்தில் கனவுகளுடன் காத்திருந்த மணப்பெண் இதை கேட்டு அதிர்ச்சியில் கதறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here