அமைச்சர் பதவி ஆசைகாட்டி பணம் பறிப்பு! ஜெ. தீபா மீது போலீசில் புகார்!!

சென்னை: அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்தார் என்று ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் முட்டைவியாபாரி ராமச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விபரம்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன்.அவரது கார் டிரைவர் ராஜா என்னை தொடர்பு கொண்டு தீபா மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவசர கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தி.நகரில் உள்ள வீட்டில் மராமத்து வேலைகள் இருப்பதாகவும் கூறினார்.

தீபாவிடமும், ராஜாவிடமும் ரூ.50 லட்சம் கடனாக வழங்கினேன். இதனைத்தொடர்ந்து பலமுறை தீபாவுக்கு பணம் கொடுத்துள்ளேன். அவர் என்னை அமைச்சராக்குவதாக உறுதியளித்தார்.

தற்போது பணத்தை திருப்பிக்கேட்டால் என்னை மிரட்டுகிறார்கள்.
என்னைப்போன்றே பலரிடமும் அமைச்சர், மாவட்டச்செயலாளர் பதவி தருவதாக கூறி பணமோசடி செய்துள்ளார் தீபா.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here