பிரதமர் மோடியுடன் பிரபல நடிகை டுவிட்டர் போர்!

பெங்களூர்: பிரதமர் நரேந்திரமோடியுடன் டுவிட்டரில் மோதலை துவக்கியுள்ளார் நடிகை ரம்யா.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ரம்யா.

தற்போது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவை நிர்வகித்து வருகிறார்.
சனிக்கிழமை பெங்களூர் வந்த பிரதமர் நரேந்திரமோடி பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை (டாப்) அளிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கிரீன் என்ற திட்டத்தில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டம் அமுல் பால்பொருள் தயாரிக்கும் நிறுவனம் இயங்குவதைப்போன்று இயங்கும் என்றார்.
இத்திட்டத்தை விமர்சித்து ரம்யா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/divyaspandana/status/960178968853753856

நீங்கள் பாட்-ல் இருக்கும்போது இவற்றால் என்ன பயன்? என்று மோடி கூறிய டாப் என்ற வார்த்தையை மாற்றி கருத்து கூறியிருந்தார்.
அதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
பாட் என்பதற்கு போதைதரும் பொருள் என்ற ஒரு பொருளும் இருப்பதால் இக்கண்டனங்கள் எழுந்தன.
அதற்கு பதில் அளித்துள்ள ரம்யா, பாட் என்றால் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளிதான். நீங்கள் வேறென்ன புரிந்துகொண்டீர்கள் என்றும் கேள்விகேட்டுள்ளார்.

மேலும், எல்லையில் தற்போது இந்திய வீரர்கள் கொல்லப்படும் சம்பவத்துக்கு பிரதமரை கண்டித்து ஒரு டுவிட்டை தட்டியுள்ளார்.

அதில், டோக்ளாம் சம்பவத்தை கண்டித்து நரேந்திரமோடி 2013ல் டுவிட்டரில் பதிந்துள்ள கருத்தை டச்சப் செய்து வெளியிட்டுள்ளார். மேலும், முதலில் எல்லையில் அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துங்கள். பின்னர் பேசலாம் என்றும் கூறியுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here