நடிகர் விஷால் தனிக்கட்சி தொடங்க திட்டம்!

மதுரை: தனிக்கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனுச்செய்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் தெரிவித்து வருகிறார் விஷால்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது:
உள்ளாட்சித்தேர்தல் அறிவித்ததும் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வேன் என்றார்.

மேலும் “பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

வழிபாட்டுஸ்தலமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை அளித்துள்ளது. இது மாதிரியான விபத்துகள் மீண்டும் நடக்காத அளவுக்கு அரசு அதிக கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டுவது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here