Connect with us

International

அமீரக தீயணைப்பு துறையில் பெண்கள் சேர்ப்பு!

Published

on

ஷார்ஜா: அமீரகத்தில் தீ விபத்து மற்றும் தடுப்புப்பிரிவில் முதன்முறையாக பெண்கள் பணிக்கு சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கவேண்டும் என்பதில் மத்தியகிழக்கு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.மத நெறிமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்கிவருகின்றன.
இரவு நேரங்களில் பெண்கள் பணியாற்றலாம், கார் ஓட்டலாம், விளையாடலாம் என்று படிப்படியாக உரிமைகள் பெற்று வருகின்றனர் பெண்கள்.சவால் மிகுந்த பணியான தீயணைப்புத்துறையில் தற்போது பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 15பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வேலைக்காக பெறப்பட்ட 200 விண்ணப்பங்களில், பள்ளிப்படிப்பு முடித்து உடல் ஆரோக்கியமாக உள்ள 28வயதுக்குள்ளான பெண்கள் தீயணைப்பு படையில் சேர்ந்துள்ளனர்.

அவர்கள் ஷார்ஜாவில் உள்ள தீயணைப்புப்பள்ளியில் விசேஷ பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆறுமாதம் இப்பயிற்சி முடிந்ததும், 3மாதம் ராணுவத்திலும், மேலும் 3மாதம் அவசரசிகிச்சை பயிற்சியும் இப்பெண்கள் பெறவுள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator