அரசு உதவி பெற அதிமுகவில் சேரவேண்டும்! அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

மதுரை:தமிழக அரசு திட்டங்களில் பயன்பெற ஆளும்கட்சியான அதிமுகவில் உறுப்பினராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதில் கலந்துகொண்டு பேசினார்.
“அ.தி.மு.க உறுப்பினர் கார்டுதான் நமக்கு அத்தாரிட்டி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கார்டு என்பது நமக்கு உயிர் போன்றது. எனவே, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வைத்திருப்பது அவசியம்.

இந்தக் கார்டு இருந்தால்தான் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தினருக்கோ அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும்.
அது எந்தவகையான உதவியாக இருந்தாலும் சரி.இந்தக் கார்டு இருந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை நான் பட்டவர்த்தனமாகச் சொல்ல விரும்புகிறேன்.
எனவே, சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகள், அ.தி.மு.க-வினரையும் அ.தி.மு.க மீது அபிமானம் உள்ளவர்களை மட்டுமே அ.தி.மு.க-வில் சேர்க்க வேண்டும்.  மற்றவர்களைச் சேர்ப்பது தவறாகிவிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.  அமைச்சரின் இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here