திருமணத்துக்கு மறுப்பு! இளம்பெண் சுட்டுக்கொலை!

லக்னோ: திருமணம் செய்யமறுத்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லக்னோ அருகில் உள்ள கேரா ஜலல்பூர் கிராமத்தில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
அக்கிராமத்தை சேர்ந்த பெண் லவ்லிமிஸ்ரா என்ற இலு(18).

 

தனது தாய்மாமன் வீட்டில் வசித்து வந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த அமித் என்பவர் ஒருதலையாக காதலித்துவந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமித் தனது சகோதரன் சுமீத், இரு சகோதரிகளுடன் லவ்லிமிஸ்ரா வீட்டுக்கு வந்தார்.


மிஸ்ராவை தனக்கு திருமணம் செய்துகொடுங்கள் என்று குடும்பத்தாரிடம் கேட்டார்.
இதனால் கோபமடைந்த லவ்லிமிஸ்ரா, அமித்திடம் நேரடியாக உன்னைப்பிடிக்கவில்லை.

எனக்கு உன்னை திருமணம் செய்ய சம்மதம் இல்லை என தெரிவித்தார்.கடும்கோபமடைந்த அமித், தனது கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினார்.
அதில், லவ்லிமிஸ்ரா இறந்தார். அவளது சகோதரி நீரஜ் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here