மகளை சீண்டியவரை தாக்க முயன்ற தந்தை! நீதிமன்றத்தில் பரபரப்பு!!

மிச்சிகன்:மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த டாக்டரை நீதிமன்றத்தில் அடிக்கப்பாய்ந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

மிச்சிகனில் வசித்து வருபவர் ரண்டல் மர்கிரேவ்ஸ். இவருக்கு 3மகள்கள்.
மூவரும் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவருவது வழக்கம்.
அங்கு பயிற்சியாளர் மற்றும் மருத்துவராக பணியாற்றிவரும் லாரி நசார் இச்சகோதரிகளிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

இதேபோன்று பயிற்சிக்கு வரும் பெண்களை சீண்டியதாக அவர் மீது புகார்கள் குவிந்தன.
அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் 3வழக்குகளில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 60ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 7வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ரண்டல் சகோதரிகளின் வழக்கு விசாரணைக்கு வந்தது.பூட்டிய அறையில் நீதிபதி விசாரித்துவந்தார். அப்போது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் குறித்து விடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.
அதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த ரண்டல் மர்கிரேவ்ஸ், குற்றவாளியான டாக்டரை அடிக்கப்பாய்ந்தார்.

அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். அவரை நீதிபதி எச்சரித்து வெளியேற்றினார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here