பசுவின் சிறுநீரில் மருந்து தயாரிப்பு! உ.பி. அரசு திட்டம்!!

லக்னோ: பசுவின் சிறுநீரில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் பணியை உத்தரப்பிரதேச மாநில அரசு துவக்கியுள்ளது.
அம்மாநிலத்தின் ஆயுர்வேத மருத்துவத்துறை பசு மூத்திரத்தில் இருந்து 8வகை மருந்துகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

கல்லீரல் பிரச்சனை, மூட்டுவலி, சக்தி குறைபாடு ஆகியவற்றுக்கு தீர்வாக இம்மருந்துகள் இருக்கும் என்று டாக்டர். ஆர்.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ மற்றும் பிலிபிட் நகரில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கு பசுமூத்திரம், பால், நெய் ஆகியவற்றைக்கொண்டு மருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக பசுமூத்திரத்தில் செய்யப்பட்ட வீடுசுத்தம் செய்யும் பினாயில் உள்ளிட்ட பொருட்களுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மாநிலத்தில் உள்ள 8ஆயுர்வேத கல்லூரிகளிலுமே மருந்து செய்முறை கற்றுத்தரப்படுகிறது.ஆயுர்வேதத்தில் மருத்துவகுணம் கொண்டதாக பசுமூத்திரம் கருதப்படுகிறது.
மேலும், சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதனை உறுதிசெய்கின்றன. எனவே, மருந்து உற்பத்தியில் தீவிரகவனம் செலுத்தியுள்ளோம் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here