காவிரி நீருக்கு மாற்று ஏற்பாடு! பாஜக தலைவர் யோசனை!!

சென்னை: தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.சென்னையில் அவரளித்த பேட்டி: தமிழகத்துக்கு காவிரிநீர் ஒருபோதும் கிடைக்காது.
தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து என்னை கேட்டுக்கொண்டால் 3மாதத்தில் இத்தாலியில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை கொண்டுவருவேன்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்திலும் இதுபோன்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது அவருடைய சொந்தக்கருத்து என்றும், இதற்கும் பாஜ கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார்.சந்திப்புக்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார். ஆனால், இப்போது வரை சந்திப்பு குறித்து கர்நாடக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனால் காவிரி விவகாரத்தில் புதிய வழக்கை தொடர தமிழக அரசு உத்தேசித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here