’யூடியூப் கோ’-ஆப் சேவை உலகம் முழுவதும் விரிவாக்கம்!

மும்பை: ‘யூடியூப் கோ’ஆப் சேவை 130நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறைவான இணைய வேகத்திலும் விடியோக்கள் பார்ப்பதற்கு உதவியாக இருப்பது ’யூடியூப் கோ’ஆப்.இந்தியா, இந்தோனேசியா ஆகியவற்றில் இந்த ஆப் சேவை பெரும் வரவேற்பை பெற்றது.
அதில் சில மேம்பாடுகளை செய்துள்ள கூகுள் தற்போது 130நாடுகளில் அதனை வெளியிட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யூடியூப் கோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆப், வைபை இணைப்பிலும் இயங்கும்.
இதனை பயன்படுத்தி விடியோக்கள் டவுன்லோடு செய்து சேமிக்கலாம். விடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
ஒரேநேரத்தில் பல விடியோக்களை அனுப்பும் வசதி உண்டு.

விடியோக்களை என்க்ரிப்ட் செய்து பாதுகாப்பாக அனுப்பமுடியும்.
விடியோக்களை பெறும் நபரும் யூடியூப் கோ ஆப்பை ரிசிவ் மோடில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here