புது மாப்பிள்ளைக்கு ‘கட்’! கல்யாணம் ஒத்திவைப்பு!!

போபால்: புதுமாப்பிள்ளையின் ஆண் உறுப்பை வெட்டிச்சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது மத்தியப்பிரதேச மாநிலத்தில்.

அம்மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தில் மங்கள்ராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.
பிப்ரவரி 6ம் தேதி திருமணம் செய்வதாக இருந்தது. இதனால் மங்கள்ராம் வீட்டில் உறவினர்கள் குவிந்தனர்.

நேற்றிரவு வழக்கம்போல் மங்கள்ராம் படுக்கைக்குச்சென்றார்.
நள்ளிரவில் அவர் கதறல் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பியது.
ரத்தவெள்ளத்தில் மங்கள்ராம் கதறிக்கொண்டிருந்தார். அவரது ஆண் உறுப்பு வெட்டப்பட்டிருந்தது.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
துண்டான உறுப்பை வீடு முழுவதும் தேடினர். அகப்படவில்லை. அதனை வெட்டிய நபர் கையோடு எடுத்துச்சென்றாரா அல்லது எங்கேயும் வீசிவிட்டுச்சென்றாரா என்பது தெரியாத குழப்பம் நிலவுகிறது.இருப்பினும், மங்கள்ராம் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவருக்கு ஆபரேஷன் செய்ய வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மங்கள்ராம் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோரிடமும் அன்பாகவே பழகுபவர்.
எனவே, இக்குற்றத்தைச்செய்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.பெண் வீட்டாரையும் போலீசார் சந்தேகிக்க தொடங்கி விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here