உலகின் குண்டுப்பையன் ஒல்லி ஆனான்!

இந்தோனேசியா: உலகிலேயே குண்டு குழந்தையாக விளங்கியவர் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பிர்மனா(12).
கடந்த ஓராண்டாக இவர் தீவிர சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.

இதனால் எழுந்து நிற்கக்கூட இயலாமல் இருந்த ஆர்யா தற்போது பள்ளிக்கூடம் செல்லும் அளவுக்கு தேறியுள்ளார்.
அவர் உடல் எடை 80கிலோ குறைக்கப்பட்டு 110கிலோவாக உள்ளது.ஆர்யாவின் பெற்றோர் ரொக்கையா, ஆதிசோமந்திரி தங்கள் மகன் பள்ளி சென்று படிக்க தொடங்கியுள்ளது குறித்து பெரிதும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இத்தம்பதிக்கு பிறந்த இரண்டாவது குழந்தை ஆர்யா.

 

பிறந்தபோது எல்லா குழந்தைகளைப்போன்று சாதாரண எடையில்தான் ஆர்யாவும் இருந்துள்ளார்.
ஒரு வருடம் கழிந்ததும் அவர் உடல் எடை அதிகமாக தொடங்கியது.
இது ஹார்மோன்களின் விளைவால் ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைப்பருவத்தில் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தரமுடியாது என்பதால் ஆர்யா வளரட்டும் என்று காத்திருந்தனர்.
தற்போது ஆர்யாவுக்கு உணவுக்கு கட்டுப்பாடு முக்கியமாக விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகள் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.


முன்னர் தினமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார் ஆர்யா. அந்த அளவுக்கு பசி இருக்கும். தற்போது பசி குறைந்துள்ளது. புட்பால், வாலிபால் விளையாடும் அளவுக்கு திறனுள்ள மாணவராக அவர் விளங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here