இளைஞர்களை தாக்கும் போலீஸ்! விடியோ வெளியானதால் 3பேர் சஸ்பெண்ட்!

விழுப்புரம்:போலீசார் லஞ்சம் வாங்குவது, அவமதித்து பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிவருகின்றன.

விழுப்புரம் அருகே வாகன ஓட்டிகளை தாக்கி பணம் கேட்டு மிரட்டிய எஸ்.எஸ்.ஐ. உட்பட 3 காவலர்கள் விடியோ சமீபத்தில் வெளியானது.விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நகரில் போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டினர். இதை செல்போனில் படம் பிடித்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் லத்தியால் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. ராஜராம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணை முடிவில்,
சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், காவலர் சுரேஷ், அய்யனார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

இதேபோல் ஓசூர் அருகே சோதனைச்சாவடியில் சரக்கு வாகன ஓட்டியிடம் போலீசார் கூடுதலாக லஞ்சம் கேட்டு பேரம் பேசிய விடியோ வெளியானது. அந்தபோலீசார் இருவரும் ஆயுதப்படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here