அப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்! ஸ்ருதிஹாசன் பேட்டி!!

சென்னை: நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து உதவியாகவும் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன்
பிரபல நாளிதழுக்கு அவரளித்த பேட்டி.

அப்பா கமலஹாசனுக்கு எப்போதும் சமூக பொறுப்புகள் உண்டு. அவர் படங்களில் அது எதிரொலிக்கும்.
முன்னர் திரைப்படங்கள் வழியாக சொன்னதை இனிமேல் மக்களிடம் நேரில் சொல்லப்போகிறார்.
அவரது அரசியல் கட்சி தொடங்கும் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது அரசியல் பயணத்துக்கு என்னுடைய ஆதரவை முழுமையாக அளிப்பேன்.அரசியலுக்கு புதிதாக எந்த நடிகரோ அமைப்போ வந்தாலும் எனது அப்பாவுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன்.
தங்கையுடன் சேர்ந்து நடிக்க சரியான கதை கிடைத்தால் நடிப்பேன்.

திரையிசை அமைக்க அதிகநேரம் எடுத்துக்கொள்வதால் அதில் எனது பங்களிப்பை குறைத்துக்கொண்டேன்.

எனது திருமணம் காதல் திருமணம்தான். ஆனால், சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here