தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க முடியாது! மத்திய அரசு தகவல்!!

டெல்லி: தமிழை வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்க முடியாதென்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையின் அலுவல் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதிமுக எம்பி சசிகலாபுஷ்பா எழுந்து நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுதாரி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

தமிழ்மொழியை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்கமுடியாது.
உச்சநீதிமன்ற முழு அமர்வு தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இக்கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் 1997,1999 ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. என தனது பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது 2006ல் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அனுமதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினார்.
இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 2010, 2017ல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமாக நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here