பிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை!

கியூபா: பிடல்காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. இவரது மூத்தமகன் டியாஜ் பலார்ட்(68). இவரும் தந்தையைப்போன்ற முகத்தோற்றத்தை கொண்டிருந்தார்.

 

இவரை பிடலிடோ என்று மக்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.
அணு இயற்பியலில் பட்டம் படித்துள்ள இவர் கியூபா நாட்டு அணு ஆராய்ச்சி திட்ட ஆலோசகராக இருந்தார்.

கடந்த ஆண்டு தந்தை இறந்ததில் இருந்தே டியாஜ் பலார்ட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.
இரு மாதங்களுக்கு முன்னர் அதற்காக பிரபல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கியூபாவில் அடுத்தமாதம் ஆட்சிமாற்றம் நிலவும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் டியாஜின் மரணத்தில் சந்தேகமும் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here