செல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ!

ரஷ்யா: ஓடும் விமானத்தில் செல்போன் சார்ஜர் வெடித்து தீ பரவியது.
இதனால் பெரும் பரபரப்பு ரஷ்ய விமானத்தில் ஏற்பட்டது.
ரஷ்யாவின் வொல்கோக்ராடு விமான நிலையத்தில் மாஸ்கோவில் இருந்து ஏர்பஸ் விமானம் தரையிறங்க வந்தது.

விமானம் தரையை தொடுவதற்காக தாழ்வாக பறந்து வந்துகொண்டிருந்தது.
அப்போது பயணிகள் இருக்கை பகுதியில் திடீரென்று தீ ஏற்பட்டது.
பயணி ஒருவர் செல்போன் சார்ஜர் ஒன்று வெடித்ததால் தீ பிடித்துள்ளது.

சீட்பெல்ட்டுகளை விலக்கி ஓரிரு பயணிகள் துணிச்சலாக தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here