முகத்தில் பலூன்கள் பொருத்திய பெண்!

ஷாங்காய்: முகத்தில் 4பலூன்களை ஆபரேஷன் செய்து பொருத்திக்கொண்டுள்ளார் ஒரு பெண்.

ஷாங்காய் நகரை சேர்ந்தவர் ஷியோ யான்(23). இவரது முகத்தின் இடது கண் ஓரத்தில் கருப்பு நிற மரு பெரிதாக காணப்பட்டது. வயது ஏற ஏற அவரது மருவும் வளர்ந்தது.  அதில் முடிகளும் முளைத்தன.

அம்மருவை நீக்கிவிட டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார் யான்.  அம்மரு கேன்சர் கட்டியாக மாறிவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அதனை ஆபரேசன் செய்து நீக்க முடிவெடுத்தனர்.

இதற்காக, ஒருலட்சம் யுவான் செலவில் முதல்கட்ட ஆபரேசன் செய்துள்ளார் ஷியோ யான்.  அவர் முகத்தில் உள்ள தோல் திசுக்கள் புதிதாக வளர 4பலூன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் அவ்வப்போது குளுகோஸ் தண்ணீர் செலுத்தப்பட்டு பலூன்கள் தொடர்ந்து பெரிதாக இருக்குமாறு செய்யப்படுகிறது.  இதனால் புதிய செல்கள் வளரும். தற்போது முகத்தில் காணப்படும் கருப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

ஜூன் மாதம் அக்கருப்பு நிற மருவைக்கொண்ட தோலை டாக்டர்கள் ஆபரேசன் செய்து நீக்க உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here