சூப் கடையில் ஒரேநாளில் ஒரு லட்சம்! பிசினஸ் ரகசியம் வேறொன்றுமில்லை!!

தைவான்: தெருவோரத்தில் சூப் கடையில் கவர்ச்சி உடையில் பரிமாறிய பெண்ணால் ஒரேநாளில் ஒரு லட்ச ரூபாய் வரை வியாபாரம் நடந்துள்ளது.தைவான் நாட்டில் உள்ளது தாய்சங் நகரம். இங்குள்ள சந்தைப்பகுதியில் தெருவோரத்தில் சூப் கடை நடத்தி வருகிறார் ஒருவர்.

சூப் தவிர வெண்ணெய் தடவிய மாமிசத்துண்டுகளை பொறித்தும், சாட் உணவுவகைகளும் அவர் விற்றுவந்தார்.
அவர் எவ்வளவு சுவையாக தயாரித்தாலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

வாடிக்கையாளர்களை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்.
விளம்பர மாடலில் நடித்துவரும் பெண்ணை தனது கடையில் வேலைக்கு அமர்த்தினார்.

அப்பெண் கவர்ச்சியான உடையில்வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு அளித்தார்.
இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அன்றைய தினமே அக்கடையை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.
ஒரே நாள் இரவில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடை உரிமையாளர் கல்லா கட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here