ஏழைகளுக்கு ரூ.50கோடியில் சுகாதார காப்பீடு! பட்ஜெட்டில் அறிவிப்பு!!

டெல்லி: 10கோடி ஏழைகளுக்கு சுகாதார காப்பீடு ரூ.50கோடியில் சுகாதார காப்பீடு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.

அதில் சுகாதார திட்டங்கள் குறித்து அறிவிப்பு செய்தார்.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இரு புதிய அறிவிப்புகளை அறிமுகப்படுத்தினார்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10கோடி மக்கள் பயனடையும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.50கோடி வரை சுகாதார காப்பீடு வசதி கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு 5லட்சம் வரை மருத்துவ நிதி பெற முடியும்.

3நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி, 24 மருத்துவ கல்லூரிகள் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here