தங்கம் மீது புதிய வரி! பட்ஜெட்டில் சூசக தகவல்!!

டெல்லி:தங்கம் மீதான புதிய வரி விதிக்கப்படுமென்று சூசகமாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை சேமிப்பாக கருதுகின்றனர்.
இதனால் மக்களின் செலவு செய்யும் மனப்போக்கு குறைவாக உள்ளது.இதனை குறைத்து டிஜிட்டல் கலாச்சாரத்தில் மக்களை கரைக்கவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தங்கம் மீதான மக்களின் சேமிப்பு பழக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசின் தங்க கொள்கையில் வரிவிதிப்பு வரலாம் என்று மூத்த தங்க வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பட்ஜெட்டில் தங்கம் கொள்கை குறித்து நிதியமைச்சர் கூறுகையில்,
தங்கம் சொத்தாக கருதி மேம்படுத்த புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது நுகர்வோருக்கு சாதகமாகவும், விற்பனையை ஒழுங்குபடுத்துவதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசின் தங்க டெபாசிட் திட்டங்கள் சீரமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தங்கத்தை சொத்து என்று அரசு கருதி செயல்பட்டால் அதன் மீது முதலீடு செய்துள்ளோர் புதிய வரி செலுத்த வேண்டிய நிலை வரலாம்.தங்கம் மீது மக்களின் முதலீட்டு தொகையை அரசு எப்போதும் சேமிப்பாகவே கருதவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here