மாரடைப்பு வந்தவரை காப்பாற்றிய ஊர்க்காவல்படை வீரர்கள்!

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் புரனாபுல் நகரில் மாரடைப்பு ஏற்பட்டவரை ஊர்க்காவல் படையினர் காப்பாற்றினர்.
பஹந்தூர்புரா காவல் நிலையத்தின் ஊர்க்காவல் படைப்பிரிவில் சந்தன், இனயதுல்லா பணியாற்றி வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் அவர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரடைப்பால் ஒருவர் திடீரென்று நடுரோட்டில் சரிந்து விழுந்தார்.அவருக்கு ஊர்க்காவல் படை வீரர்கள் இருவரும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஊர்க்காவல் படையினர் துரிதமாக செயல்பட்டு ஒருவரை காப்பாற்றியதற்காக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராமாராவ் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விடியோவை தனது டுவிட்டரில் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here