“டெக்னோ மித்ரன்” பட்ஜெட் 2018!

டெல்லி: மத்திய பட்ஜெட் டெக்னோ மித்ரன் -தொழில்நுட்ப நண்பனாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் இந்தியாவுக்கு ராஜபாட்டை அமைக்கும்விதமாக மத்திய பட்ஜெட்டில் ரூ.3,073கொடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணத்தைக்கொண்டு ரோபோட்டிக்ஸ், ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி, திறன் மேம்படுத்தும் பணிகள் நடைபெறும்.

இதுதொடர்பாக நிதிஆயோக் அமைப்பு தேசியத்திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட உள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.

5ஜி அலைக்கற்றை தொடர்பான ஆராய்ச்சிகள் சென்னை ஐஐடியில் முன்னெடுக்கப்படும்.
பிக்டேட்டா, சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் ஆகிய துறைகளிலும் தொழில்வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் பயனளிக்கும்.
ஐடி, பிடி ஆகியவற்றை தொடர்ந்து ஐடி பிபிஎம் துறையாக புதிய துறை கோலோச்சும்.
அரசு மற்றும் தனியார் நிதியுதவியுடன் செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பால் இளைஞர்களை எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here