பிட் காயின்களுக்கு அனுமதி இல்லை! பட்ஜெட்டில் அறிவிப்பு!!

டெல்லி: இந்தியாவில் பிட்காயின்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

மத்திய பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:

கிரிப்டோ கரன்சி அல்லது காயின்களுக்கு அரசு எந்தவித அங்கீகாரமும் அரசு அளிக்காது.  அவற்றை முறைகேடாக பயன்படுத்தொவோர் மீது நடவடிக்கை எடுத்து தடுக்கப்படும். 

கிரிப்டோ கரன்சிகளின் உபயோகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, க்ரிப்டோ கரன்சிகள் உருவாக்கப்படும் ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், எலக்ட்ரானிக் பணப்பரிமாற்றத்துக்கு ப்ளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 

தொழில், வர்த்தகம் எளிமையாக்கப்படும் வகையில் 372 நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here