மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம்!

டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

# வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
# அனைத்து பயிர்களுக்கும் 50% குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
# விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.
# விவசாயிகள் நேரடிவிற்பனையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.# பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்க நடவடிக்கை.
# வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு
# இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை
# விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்.
# உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
# 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.
உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here