ஆன்லைனில் லுங்கி விலை ரூ.5000?!

மும்பை: ஸ்பெயினை சேர்ந்த பிரபல ஆயத்த ஆடை விற்பனையகம் சாரா. இந்தியாவிலும் இந்நிறுவனம் இணையம் வழியாக ஆடைகளை விற்பனை செய்துவருகிறது.


ஆண்கள் அணியும் லுங்கி(கைலி/சாரம்)யைப்போன்ற பாவாடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
லுங்கா எனப்படும் இந்த ஆடைக்கு விலையாக ரூ.4,990 என்று நிர்ணயித்துள்ளது.

லுங்கிகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாள், கம்போடியா நாடுகளில் ஆண்கள் அணிவது வழக்கம். இந்நாடுகளை சேர்ந்த கிராமங்களில் வாழும் பெண் தொழிலாளர்களும் லுங்கி அணியும் பழக்கம் உண்டு.

இந்த ஆடையை இடுப்பில் நிற்பதற்கான எலாஸ்டிக் சேர்த்தும், பஞ்ச கச்சம் போன்று முன்பக்கம் ஜிப் வைத்து வடிவமைத்தும் தயாரிக்கப்பட்ட லுங்காவுக்கு ரூ.4990 என்ற விலை அதிகம் என்று வலைமக்கள் விமர்சிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here