அரியவகை சந்திர கிரகணம்!

டெல்லி: 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய வகை சந்திர கிரகணம் தெரிந்தது.
நிலா சிவப்பு நிறமாக மாறும் இந்த கிரகணமானது புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு துவங்கியது. இரவு 8.41 மணி வரை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும், இரவு 7.37 மணிக்கு முழுமையான சந்திர கிரகணத்தையும் பார்க்க முடிந்தது.

இன்றைய சந்திரகிரகணத்தின் போது சந்திரன் சிகப்பு நிறத்தில் தெரியும். இதற்கு பிளட் மூன் என்று பெயர்.
ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பெளர்ணமிக்கு புளூ மூன் என்று பெயர்.
பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘சூப்பர் மூன்’ நிகழ்வு ஏற்படுகிறது.

முழு கிரகணத்தை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் இந்த கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here