இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல்!

மும்பை: கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த மூத்த வீரர்கள் 10அடி பாய்ந்தால், இளையோர் 16அடி பாய்கின்றனர் என்று கூறும் அளவுக்கு சாதனைகள் செய்துவருகின்றனர்.

மும்பை பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
யஷ்வந்த் ராவ் சவாண் அணிக்காக விளையாடிய 13 வயது சிறுவன் தனிஸ்க் கவாத் ஒரே போட்டியில் 1,045 ரன்கள் அடித்துள்ளார். ஆட்டம் முடியும் வரை அவர் அவுட் ஆகவில்லை.2 நாட்கள் களத்தில் தொடர்ச்சியாக நின்று விளையாடி 149 பவுண்டரிகள் , 67 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
உலகளவில் இதுபோன்ற சாதனை நடந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.இதற்குமுன்னர், 2016ல் இந்திய மாணவர் பிரணவ் தனவாட் 1009ரன்கள் குவித்து சாதனையில் இடம்பெற்றிருந்தார்.

தனிஸ்க் கவாத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்திய அணியில் இவன் கலக்குவான் என்று கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here