ராக்கெட்டாக சீறிப்பாய்ந்த சிலிண்டர்!

சேலம்: சேலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் ராக்கெட் போன்று பாய்ந்துசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் ரத்தினசாமிபுரம், சீத்தாராம செட்டிப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருபவர் நீதிராஜா.
பட்டறையின் வெளிப்பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்படுவது வழக்கம்.
இன்று காலை பட்டறையை சேர்ந்த ஊழியர் ஆக்சிஜன் சிலிண்டரை திறக்க முயன்றார்.
எதிர்பாராதவிதமாக, சிலிண்டரின் வால்வு திறந்தது.

பலத்த சத்தத்துடன் சிலிண்டர் ராக்கெட் போல பாய்ந்துசென்றது.
70அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் போய் சிலிண்டர் விழுந்தது.
இதில், வீட்டின் முன்பகுதியில் இருந்த சுவர், மற்றொரு வீட்டின் படிக்கட்டுகள் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் கசிவதை நிறுத்தினர்.
சிலிண்டர் ராக்கெட் போன்று பாய்ந்துசென்றதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here