பேச்சு மட்டும்தான்…செயலை காணோம்! பாஜக மீது நாராயணசாமி விமர்சனம்!!

புதுவை: மோடியின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என குற்றம்சாட்டினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

தேசப்பிதா காந்தியடிகளின் நினைவுநாள் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
சுதந்திரம் வாங்கித்தந்த காந்தி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களது உயிருக்கு குறிவைக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடி நாட்டிற்கு விடுதலை வாங்கி தந்தார். அவரது போராட்டங்களை பார்த்து உலக தலைவர்களே ஆச்சரியப்பட்டனர்.
மதக்கலவரத்தை கண்டித்து வார்தாவில் 45 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அவர் நினைத்திருந்தால் இந்த நாட்டின் பிரதமராகி இருக்கலாம்.
காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தின் விளைவாக அவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு சிலை வைக்கிறார்கள்.

சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் காங்கிரசை ஒழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். 

சுதந்திரம் வேண்டாம் என்று கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் நாட்டை ஆளுகிறார்கள்.
ஆட்சியை இழந்தாலும் மக்களுக்காக பாடுபடுவது காங்கிரஸ் கட்சிதான். அதனால்தான் எந்த கொம்பனாலும் காங்கிரசை அசைக்க முடியாமல் உள்ளது.

பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி வந்தபின் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாரதிய ஜனதா மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. அவர்கள் பேசுகிறார்களே தவிர மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு நாராயணாசாமி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here