மத்திய பட்ஜெட் சீக்ரெட்ஸ்!

டெல்லி:2018-19ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. நாளை பிப்ரவரி1ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே அறிவிக்கப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு பணி முழுவதும் நிதியமைச்சகம் இயங்கும் நாடாளுமன்றத்தின் வடக்கு வளாகத்தில் நடைபெற்றது.

தயாரிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் 12நாட்கள் அலுவலகத்திலேயே தங்கிவிடுவார்கள்.
அவர்களுக்கு வழங்கப்படும் ஒரேஒரு டெலிபோனில் குடும்பத்தினரிடம் பேச அனுமதிக்கப்படும்.
அவர்கள் இயங்கும் பகுதி முழுவதும் மூடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல்காத்து வருவார்கள்.
அந்த வளாகத்தில் செல்போன் ஜாமர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

முந்தைய பட்ஜெட் விபரங்கள் அடிப்படையிலான நீலநிறத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும்.
அதில் தற்போதைய பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்களை தனியே இணைத்து உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.பட்ஜெட் முழுமையாக தயாரானதும் வரித்துறை, சட்டத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடைபெறும். பின்னர் முழு உரைத்தொகுப்பு மற்றும் சரிபார்ப்புக்காக மத்திய அரசின் மக்கள்தொடர்பு அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள்.
இவர்களும் பட்ஜெட் தினம் வரை வடக்கு வளாகத்திலேயே தங்க வைக்கப்படுவார்கள்.
இறுதியில் பட்ஜெட் நிதியமைச்சகத்தின் தரைத்தளத்தில் உள்ள அச்சுக்கூடத்துக்கு செல்லும்.கடந்த 24ம் தேதி முதல் பட்ஜெட் அச்சடிக்கும் பணி நடந்தது.
அதற்கு முன்னதாக நிதியமைச்சர், துணையமைச்சர்கள் அல்வா கிண்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

அச்சகத்தில் புத்தகவடிவில் தயாரிக்கப்பட்டு மூட்டையாக கட்டப்பட்டு பட்ஜெட் தினத்தன்று நாடாளுமன்றம் கொண்டுசெல்லப்பட்டு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here