முதல்வர், துணைமுதல்வர் விழாவில் தேடப்படும் குற்றவாளி!!

மதுரை: தமிழக அமைச்சர் இல்ல விழாவில் தேடப்படும் குற்றவாளி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சினிமா பைனான்சியரும், அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன் தொந்தரவு கொடுத்ததால் இயக்குநர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து அன்புச்செழியன் மீது மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று போலீஸ் கூறியது.இதற்கிடையே அன்புச்செழியன் முன் ஜாமின் பெறும் முயற்சியை கைவிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரக்குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணிவிழாவில் அன்புச்செழியன் பங்கேற்றார்.

இவ்விழாவில் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அன்புச்செழியன் பங்கேற்றதில் தப்பேதும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அன்புச்செழியன் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அதை அவர் சட்டப்படி சந்தித்துவருகிறார். சினிமாத்துறையில் உள்ள பலரே அவரை நல்லவர் என்று தெரிவித்துள்ளனர்.


எனது இல்ல விழாவில் அவர் பங்கேற்றதை சர்ச்சையாக்குவது தேவையற்றது என தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜூ.
கூட்டுறவுத்துறை அமைச்சரின் 2பேரன், ஒரு பேத்திக்கு கடந்த 28ம் தேதி காதுகுத்தும் வைபம் மதுரை மக்கள் வழக்கப்படி காதணி விழாவாக நடந்தது. ஆயிரம்பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கட்சியினரிடம் இருந்து அன்பாக கிடைத்தது ரூ.2கோடிக்கும் அதிகமென கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here