விமான பயணம் மயிலுக்கு மறுப்பு!

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூவர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா. இவர் வீட்டில் மயில் ஒன்றை வளர்த்து வருகிறார்.

நியூயார்க் நகரில் பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ள ஸ்டெல்லா முடிவெடுத்தார். ஒருமாதம் அங்கு தங்கியிருக்க வேண்டியிருப்பதால் தன்னுடன் மயிலையும் அழைத்துச்செல்ல முடிவெடுத்தார்.

விமானம் ஏற மயிலுடன் வந்தார். விமான பயணவிதிகளை சுட்டிக்காட்டி மயிலுக்கு விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.

விமானத்தில் விலங்குகள் ஏற்றிச்செல்வதற்கான கூண்டில் மயிலை வைக்க முடியவில்லை.  சாதாரண பயணிகளுடன் மயிலை அழைத்துச்செல்ல முடியாது என்றும் விமான நிறுவனத்தினர் தெரிவித்துவிட்டனர்.வீட்டு விலங்குகளாக வளர்த்துவரும் நாய், பாம்பு போன்றவற்றை விமானத்தில் அழைத்துச்செல்ல 2தினங்களுக்கு முன்னராக விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் 3மணி நேரத்துக்குப்பின் செல்லமயிலுடன் வீடு திரும்பினார் ஸ்டெல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here