இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சிறுநீரக தானம்! கிறிஸ்தவ அருட்சகோதரி கருணை!

கொச்சி:மதங்களை கடந்தது மனிதநேயம் என நிரூபித்துள்ளார் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கோஸ்பல் திருச்சபையை சேர்ந்தவர் ரோசிஆண்டோ.

இவர் அருட்சகோதரியாக தன்னை மாற்றிக்கொண்டு தொண்டு செய்துவருகிறார்.
தனது இறைப்பணி சேவை 25ஆண்டுகளாக தொடர்வதை கொண்டாடும் வகையில் தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.இதுகுறித்து இந்திய சிறுநீரக சிகிச்சை கூட்டமைப்புக்கு கடிதம் எழுதினார்.
கேரள மாநிலம் இரிஞ்சன்குடாவை சேர்ந்த, இந்து மதத்தை சேர்ந்த திலகன்(47) என்பவர் சிறுநீரக தானம் பெற விண்ணப்பித்திருந்தார்.

அருட்சகோதரியின் ரத்தவகையும், திலகனின் ரத்த வகையும் ஒத்திருந்தன. இதனால் அருட்சகோதரியின் சிறுநீரகத்தை திலகனுக்கு தானம் தர முடிவானது.
கொச்சி விபிஎஸ் லேக்‌ஷோர் மருத்துவமனையில் டாக்டர். ஜார்ஜ் ஆபிரகாம் சிறுநீரக மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here