கிண்டல் செய்த மகனை எரித்துக்கொன்ற தாய்!

கொல்லம்: 14வயது மகனை கொன்றது ஏன் என்று தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொல்லம் மாவட்டம் குந்தாரா பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ஜெயம்மாள். இத்தம்பதிக்கு ஜித்துஜாப் என்ற மகன் இருந்தார்.

அவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.
தாய்க்கும், மகனுக்கும் எப்போதும் பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இதனால் வீட்டில் ரணகளமாக காணப்படும்.ஜெயம்மாவை யாரேனும் கிண்டலடித்தால் கடுமையாக கோபம் வருமாம். பதிலுக்கு அவர்களை தாக்கிவிடுவாராம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தனது குடும்பச்சொத்து கிடைக்காததால் ஜெயம்மா மன அழுத்தத்தில் இருந்துவந்தார்.
அவரை வழக்கம்போல் மகன் ஜித்து கிண்டல் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சால்வையால் மகனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் அவன் தலையில் தீவைத்து அடையாளம் தெரியாமலிருக்குமாறு செய்தார்.
நள்ளிரவில் மகனின் உடலை இழுத்துச்சென்று அருகில் உள்ள தோட்டத்தில் வீசிவிட்டு அதன்மீது இலை, குப்பைகளை வைத்துவிட்டு வந்துள்ளார்.ஜெயம்மாள் கையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்தால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் துருவிதுருவி விசாரித்தனர். அப்பெண் உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here