அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் தலைவர்கள்!

சென்னை:ஊழல், வாரிசு அரசியலை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, தமிழக, தேசிய அரசியலில் தடம் பதித்து தற்போது தனது தடயத்தையே அழித்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் பன்னீரின் பிரிவு, எடப்பாடிக்கு முதல்வர் பதவி, எடப்பாடி-பன்னீர் மீண்டும் கைகோர்ப்பு, சசிகலா மற்றும் தினகரன் நீக்கம், இரட்டை இலை மீட்பு, இடைத்தேர்தலில் சுயேச்சையிடம் தோல்வி என்று கடந்த ஓராண்டாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத கட்சியாக உள்ளது அதிமுக.ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதாவை விட வாக்குகள் அதிகம்பெற்று வென்றுள்ளார் தினகரன்.
அவர் தனிக்கட்சி தொடங்கும் ஆலோசனையில் தீவிரம் காட்டிவருகிறார்.
அதிமுகவில் தினகரனின் ஆதரவாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் தனிக்கட்சி என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என நினைக்கிறார். இதனால் சசிகலாவையும், தனது ஆதரவாளர்களிடம் தனிக்கட்சி தொடங்கினால் கிடைக்கும் நன்மைகளை அவர் விவரித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். கமலஹாசன் குறிவைப்பதும் எம்.எல்.ஏ. தேர்தலாகத்தான் உள்ளது.

எனவே, உள்ளாட்சிகளில் நமது அணியினர் பெருவாரியாக வெற்றிபெற்றால் எம்.எல்.ஏ., எம்பி தேர்தலுக்கு உதவியாக இருக்கும்.
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு அரசுக்கு குட்டுவைப்பதாகவே அமையும், பஸ் கட்டண உயர்வால் அதிமுக மீதே மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

எனவே தனிக்கட்சி தொடங்குவதற்கான சரியான தருணம் இதுஎன்று நினைக்கிறார். அவரது ஆதரவாளர்களில் சிலர் தனிக்கட்சி விஷயத்தில் தயங்கிவந்தனர். அவர்களும் தற்போதைய சூழ்நிலையில் தினகரனின் வாதத்தில் நியாயம் உள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஆளும் கட்சியான அதிமுகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை களைகட்ட தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பூத்வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஸ்கட்டண உயர்வு, விலைவாசி ஏற்றத்தால் மக்கள் அதிருப்தியால் உள்ளனர்.
குட்கா மற்றும் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீட்டு வாய்ப்பையும், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பியுமே நாட்களை நகர்த்திவருகிறது அதிமுக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here