உ.பி.யில் தலைவிரித்தாடும் ஊழல்! அமைச்சர் பரபரப்பு பேச்சு!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அம்மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாரதிய சமாஜ் கட்சித்தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாநில அரசு தங்கள் கட்சியினரை மதிப்பதே இல்லை என்று குறைபட்டுக்கொண்டார்.
முந்தைய ஆட்சியாளர்களை ஒப்பிடுகையில் தற்போது மாநிலத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.

இந்த அரசில் நான் பங்கேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சராக உள்ளேன். எங்கள் கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இருந்தபோதும் இது எங்களுக்கான அரசாக இருக்கவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க பாஜக முன்வரவில்லை என்றால் நாங்கள் தனியாக போட்டியிடுவோம் என்றார்.
கடந்த ஆண்டு அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறைவைப்போம் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here