Connect with us

Business

ஷார்ஜாவில் உலகின் மெகா மோதிரம்!

Published

on

ஷார்ஜா: உலகின் மிகப்பெரிய தங்கமோதிரம் ஷார்ஜா வணிகநிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தைபாவின் நட்சத்திரம் என்று இந்த மோதிரத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.21கேரட் தங்கத்தில் உலக தங்க கவுன்சிலின் விதிமுறைகளுக்கேற்ப இம்மோதிரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் 5.1கிலோ ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன.மேலும் 615கிறிஸ்டல்களும் இடம்பெற்றுள்ளன.

இம்மோதிரத்தின் மொத்த எடை 64கிலோகிராம் ஆகும்.
2000ம் ஆண்டில் 50பொற்கொல்லர்கள் சேர்ந்து 45நாட்களில் இம்மோதிரத்தை உருவாக்கியுள்ளனர்.

இம்மெகா மோதிரத்தை தயாரிக்க 5.47லட்சம் அமெரிக்க டாலர் செலவானது. தற்போதைய மதிப்பு 3மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இம்மோதிரத்தை துபாயை சேர்ந்த தைபா என்ற நிறுவனம் சொந்தமாக வைத்துள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator