கண்ணைக்கவரும் கடல் பாதை! உடுப்பியில் புதிய அதிசயம்!!

உடுப்பி:சுற்றுலா பயணிகளை ஈர்க்க கர்நாடகாவில் முதன்முறையாக உடுப்பி கடற்கரையில் ‘கடல்பாதை’ அமைக்கப்பட்டுள்ளது.

உடுப்பி மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை வசீகரிக்கும் வகையில் தற்போது 500மீட்டர் நீளத்துக்கு கடற்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

4மீட்டர் அகலத்தில் இப்பாதை 3மாதங்களில் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாதை முடிவில் மீனவர் மனைவி, குழந்தையுடன் உள்ள சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

மால்பே கடற்பகுதியில் உள்ள செயிண்ட்.மேரி தீவு மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
இங்குள்ள பாறைப்படிவங்கள் இயற்கையிலேயே கண்ணைக்கவரும் வகையில் ஆப்ரிக்காவில் உள்ள பாறைகளைப்போன்று அதிசயத்துடன் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here