பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மறியல்! தலைவர்கள் கைது!!

சென்னை:தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பஸ் கட்டணம் உயர்வை எதிர்த்து மறியல் போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக செயல்தலைவரும் எதர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து கையில் கொடியேந்தி பேரணியாக வந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர்.

 

பேரணி முடிவில் கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற மறியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை யில் சென்னை ராயப் பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here