மகனை சித்ரவதை செய்த தந்தை கைது!

பெங்களூர்: மகனை அடித்து சித்ரவதை செய்த தந்தை கைதானார்.
பெங்களூரில்,  மகேந்திர குமார் என்பவர், தனது மனைவி மகனுடன்  வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்,  10 வயதான தனது  மகனை, பெல்ட்டால் அடித்தும், தூக்கி எறிந்து மிதித்தும், சித்ரவதை செய்த விடியோ வெளியானது.
மகன் பொய் சொன்னான் என்பதற்காக, இவர் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.  இரண்டு மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனை படம்பிடித்த மகேந்திரகுமாரின் மனைவி பொய் சொன்னால் இப்படி துன்பப்பட நேரிடும் என்று மகனுக்கு பாடம்புகட்ட இவ்வாறு செய்துள்ளார்.
மகேந்திர குமார் தனது மொபைலை சரிசெய்ய கடையில் கொடுத்த போது, அந்த கடைக்காரர்  இந்த விடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதை இணையதளத்தில் லீக் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த விடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
அதைத்தொடர்ந்து, போலீசார் குமாரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here