Connect with us

Cinema

ஷகீலாவின் புது அவதாரம்!

Published

on

ஹைதராபாத்: செக்ஸ் பாம் என்று ரசிகர்கள் கொண்டாடும் ஷகிலா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் போதைப்பழக்கம் உடைய பெண்ணாக நடிக்கிறார்.

34ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துவருகிறார் ஷகிலா. சுமார் 300படங்களில் நடித்துள்ளார். ஷகிலாவின் ஆத்ம கதை என்று தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 2மலையாள படங்களையும் ஷகிலா இயக்கியுள்ளார்.

ஆந்திரமாநிலம் நெல்லூரை சேர்ந்த ஷகிலா, ஸீ புரடக்‌ஷன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் கதை ஷகிலாவை மையப்படுத்தியே வருகிறதாம்.

ஷீலாவதி என்று இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஷீலாவதியை சாய்ராம் தாசரி இயக்குகிறார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator