பக்கீர் வேடத்தில் வந்த திருடன்! 8பவுன் நகைகளுடன் ஓட்டம்!!

கர்நாடகா:பக்கீர் வேடத்தில் வந்த கொள்ளையன் 8பவுன் நகைகளுடன் தப்பிச்சென்றான். உடுப்பி மாவட்டம் காபு அருகில் உள்ளது உதயவர் கிராமம்.
இக்கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
ஒரு வீட்டில் தனியாக இருந்த மாமியார், மருமகளிடம், பக்கீர் வேடத்தில் வந்த கொள்ளையன் பேச்சுக்கொடுத்துள்ளான்.
அவர்கள் வீட்டில் உள்ள தங்க நகைகள் விரைவில் கொள்ளை போகும் என்று கூறியுள்ளான்.
தான் அதற்கு பூஜை செய்து தருவதாகவும், அதன்பின்னர் அவை களவுபோக வாய்ப்பில்லை என்றும் அப்பெண்களிடம் தெரிவித்துள்ளான்.இதனை நம்பி அப்பெண்கள் வீட்டில் இருந்த 8பவுன் எடையுள்ள செயின், கம்மல், மொதிரம் ஆகிய நகைகளை கொடுத்துள்ளனர்.
அவற்றை தான் கொண்டுவந்திருந்த மண்பாத்திரத்தில் போட்டு அதற்கு சாம்பிராணி போட்டுள்ளான்.
அப்பானையை பெண்களிடம் திருப்பியளித்த பக்கீர் அங்கிருந்து திரும்பிச்சென்றான்.
பானையை பார்த்த பெண்கள் திடுக்கிட்டனர். அவர்கள் கொடுத்த நகை எதுவும் அதில் இல்லை.  இதுகுறித்து காபு நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here