முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ள முத்தலாக் சட்டம்!

ஹைதராபாத்: முஸ்லிம் ஆண்களை சிறையில் தள்ளும் சூழ்ச்சியுடன் முத்தலாக் தடை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக மஜ்லிஸ் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.ஹைதராபாதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
முஸ்லிம் மதகுருமார்களுடன் கலந்து ஆலோசனை நடத்தாமல்,முத்தலாக் மசோதாவை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது.

சட்டம் கொண்டுவந்தால் மட்டும் முத்தலாக் நடைமுறை நின்றுவிடுமா?
வரதட்சணைக்கு எதிராக சட்டம் இருந்தாலும் இந்தியாவில் தினமும் அக்கொடுமையால் 22பெண்கள் இறக்கின்றனர்.பாலியல் கொடுமைக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
சட்டங்கள் மூலம் சமூகத் தீமைகளுக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டம் கடுமுக்தேஷ்வர் கிராமத்தை சேர்ந்த குரைஷி என்பவருக்கு இரவு 11மணிக்கு திருமணம் நடந்தது.
அக்கிராமத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.

சம்பந்திகளுக்குள் தகராறு ஏற்படவே நள்ளிரவு ஒரு மணியளவில் முத்தலாக் கூறி விவாகரத்து நடைபெற்றது.
இதேபோன்று, மும்பை தானே போலீசில் பெண் அளித்த புகாரில் தனது கணவர் பதிவுத்தபாலில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததற்கான பத்திரம் அனுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here