தமிழக அரசு பஸ் கட்டணம் கொஞ்சம் குறைப்பு!

சென்னை: பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு பஸ் கட்டணத்தை சற்று குறைத்துள்ளது. இதற்கு இணையத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடந்த 19ம் தேதி உயர்த்தி அறிவிப்பு செய்தது.

பஸ்கட்டணம் அதிகளவுக்கு உயர்த்தப்பட்டதால் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.  மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து பஸ் கட்டண உயர்வை பரிசீலிப்போம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் புதியகட்டணம் அமலுக்குவருகிறது.

சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், ஏசி பஸ்களில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து  130 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும்,  அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை பேருந்து கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர, மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4ஆக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பஸ்கட்டண குறைப்பு அறிவிப்புக்கும் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. அதுதொடர்பாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here