குழந்தைகளை வெடிகுண்டாக பயன்படுத்தும் தலிபான்கள்! பகீர் தகவல்!!

காபூல்: தலிபான் தீவிரவாத அமைப்பினர் குழந்தைகளை வெடிகுண்டுகளாக பயன்படுத்துவதாக திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் 100பேர் இறந்துள்ளனர். 158 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சோதனைச்சாவடி அருகே வந்த ஆம்புலன்ஸ் திடீரென்று வெடித்தது. இதில் அப்பகுதியில் இருந்த கடைகள், சந்தைகள், அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்றார்.

அந்த ஆம்புலன்ஸ் அப்பகுதியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் தாக்குதல் நடத்த வந்திருக்கலாம் என்றும், சோதனை சாவடியில் நேரம் தாமதம் ஆனதால் அங்கேயே வெடித்துச்சிதறியது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதற்கிடையே, தலிபான் அமைப்பினர் குழந்தைகளை தங்கள் படையில் சேர்த்துள்ளனர் என்றும், குழந்தைகளை வெடிகுண்டுகளாக பயன்படுத்துகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குந்துஸ் நகரில் ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 5பேர் கைதாயினர். அவர்கள் தீவிரவாதிகள் என்று விசாரணையில் தெரியவந்தது. குழந்தையின் உடைக்குள் வெடிகுண்டை மறைத்து அவர்கள் எடுத்துவந்துள்ளனர்.

தலிபான்கள் மீது அனைத்து நாடுகளும் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here