தமன்னா மீது செருப்பு வீச்சு!

ஹைதரபாத்: நடிகை தமன்னா மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதரபாத் ஹிமயாத் நகரில் நகைக்கடை திறப்புவிழாவில் தமன்னா பங்கேற்றார்.
நகைக்கடையை திறந்துவைத்து பலருடன் செல்பி படங்களும் எடுத்துக்கொண்டார்.
நடிகையை வரவேற்க ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நடிகையை அருகே பார்க்க ரசிகர்கள் நெருக்கடியடித்து முன்னேறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில் நடிகை மீது வாலிபர் ஷூ வீசினார். அவர் அடையாளம் காணப்பட்டார்.

அவரை போலீசார் கைதுசெய்து அழைத்து சென்றனர். அவரது பெயர் கரிமுல்லா என்று தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here